உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமான்: 44வது ஆண்டாக சென்னிமலையில் விழா

பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமான்: 44வது ஆண்டாக சென்னிமலையில் விழா

சென்னிமலை: மதுரை மாநகரில் வந்தி மூதாட்டி, பிட்டு அமுது சமைத்து விற்று பிழைத்து வந்தார். வைகை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பாண்டிய மன்னன் வீட்டுக்கு ஒருவர் கரையை அடைக்கும் பணியில் ஈடுபட உத்தரவிட்டான். முதுமையால் அப்பணிக்கு செல்ல முடியாமல், கூலிக்கு ஆள் தேடியும் கிடைக்காததால், தனது இஷ்ட தெய்வமான சிவபெருமானை வணங்கினாள். அப்போது சுந்தரேச பெருமான் கூலியாளாக வேடமிட்டு வந்தார். கரையை அடைக்கும் பணிக்கு செல்வதாகவும், பிட்டு அமுதே கூலியாக பெற்றுக் கொள்வதாகவும் கூறிச் சென்றார். இறுதியில் வந்தி மூதாட்டிக்கும், பாண்டிய மன்னனுக்கும் சிவபெருமான் தரினசமாக காட்சியளித்தார். அந்த நாளே ஆவணி மாத மூல நட்சத்திர நாளாக கருதப்படுவது உண்டு. இந்த நாளான நேற்று இறைவன் பிட்டுக்கு அமுது சுமக்கும் விழா, சென்னிமலை கைலாசநாதர் கோவிலில், 44வது ஆண்டாக நேற்று நடந்தது. இதையொட்டி காலை, 10:00 மணிக்கு கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.மலை மலை கோவிலுக்கு செல்லும் பார்க் ரோட்டில், நல்ல கிணறு அருகில் வைகை கரை போல் அமைக்கப்பட்டது. மாலையில் இங்கு கைலாசநாதர், சிவகாமி அம்மாள் மற்றும் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி என ஐந்து பேரும் ஒரே சகடை தேரில் எழுந்தருளினர். சென்னிமலை முருகன் கோவில் தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஓதுவார் மூர்த்தி ஆனந்த் சிவபெருமானின் பிட்டு திருவிளையாடல் குறித்து பாடல்களை பாடினார். ஏராளமாக பெண்கள் குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து வைகை கரையில் ஊற்றி வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதமாக பிட்டு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ