உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மரக்கன்றுகள் நடவு

மரக்கன்றுகள் நடவு

ஈரோடு, ஈரோட்டில் சத்தி சாலை, கனி ராவுத்தர் குளக்கரை, அதை ஒட்டி பகுதியில், மாநகராட்சி சார்பில் நடைபயிற்சி பாதை, பாதுகாப்பு தடுப்பு, இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. நடைபயிற்சி செல்வோர், மக்கள் நலனுக்காக குளத்தின் நுழைவுவாயில் பகுதியில் இருந்து சத்தி சாலையை ஒட்டிய நடைபாதை, பெரிய சேமூர் பிரிவு சாலை வரை, 120 மரக்கன்று நட முடிவு செய்துள்ளனர். இதற்கான பணியை மாநகராட்சி துணை ஆணையர் தனலட்சுமி, துணை மேயர் செல்வராஜ் முன்னிலையில் நேற்று தொடங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !