உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பிளஸ் 1 மாணவி கர்ப்பம்; விசாரணையில் அதிர்ச்சி

பிளஸ் 1 மாணவி கர்ப்பம்; விசாரணையில் அதிர்ச்சி

கோபி: கவுந்தப்பாடியில் பாட்டி வீட்டில் தங்கி, 16 வயது சிறுமி ஒருவர், பத்தாம் வகுப்பு படித்தார். தற்போது வேறு ஊரில் பிளஸ் 1 படிக்கிறார். சிறுமி தனக்கு வயிற்று வலிப்பதாக கூறியதால், அவரது பெற்றோர் மருத்துவரிடம் பரிசோதித்தனர். இதில் நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. அதிர்ச்சடைந்த பெற்றோர் மகளிடம் விசாரித்தனர். பாட்டி வீட்டில் தனியாக இருந்த சமயத்தில், முகத்தில் மாஸ்க் அணிந்த வந்த ஆசாமி, வலுக்கட்டாயமாக மிரட்டி பலாத்காரம் செய்ததாக கூறினார். சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்படி, அடையாளம் தெரியாத ஆசாமி மீது, கோபி அனைத்து மகளீர் போலீசார், போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை