உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பிளஸ் 2 விடைத்தாள் திருத்த 3 மையம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்த 3 மையம்

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த, மூன்று மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த, 2ம் தேதி தொடங்கி நடந்து வரு-கிறது. ஈரோடு மாவட்டத்தில், 109 மையங்களில், 23,307 மாண-வ--மாணவியர், 669 தனித்தேர்வர் எழுதுகின்றனர். இந்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த, ஈரோடு மாவட்-டத்தில் மூன்று மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் கார்மல் மெட்ரிக் பள்ளி, கிறிஸ்து ஜோதி மேல்நிலைப்பள்ளி, கோபி அமலா மெட்ரிக் பள்ளி ஆகியன விடைத்தாள் திருத்தும் மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பிளஸ் 2, பிளஸ் ௧ துணைத்தேர்வு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக புகார், கருத்து, சந்தேகம் இருந்தால், கட்டுப்பாட்டு அறையை, 94983-83075 அல்லது 94983-83076 என்ற எண்களில், ஏப்.,6 வரை காலை, 8:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை, மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை