புகழூர் டி.என்.பி.எல்., நிறுவனத்தில் காவலர் போட்டி தேர்வு பயிற்சி வகுப்பு
கரூர், 'இரண்டாம் நிலை காவலர் பணி போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்பு இன்று முதல் தொடங்கும்' என, புகழூர் டி.என்.பி.எல்., நிறுவனம் தெரிவித்துள்ளது.நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டம், புகழூர், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன குடியிருப்பு வளாகத்தில் உள்ள விளையாட்டு அரங்கத்தில், தமிழ்நாடு அரசின் இரண்டாம் நிலை காவலர் பணி போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்பு மற்றும் உடற்பயிற்சி வகுப்பு, இன்று முதல் வரும் நவம்பர் மாதம் வரை நடக்கும். பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயிற்சி பெறும் அனைவருக்கும் உணவு, தேநீர், பால் மற்றும் சத்துணவு வழங்கப்படும். மேலும், உடல் தகுதித்திறன் தேர்விற்கான பயிற்சி வகுப்பு அனைத்தும் கல்வி வல்லுனர்களையும், உடற்கல்வி ஆசிரியர்களையும் கொண்டு பயிற்சி வழங்கப்படும். பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் பாதுகாப்பு துறையை அணுக வேண்டும். மேலும், விபரங்களுக்கு, 94889 89825 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.