உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஜவுளிக்கடைகளால் நெரிசல் மக்களை மறந்த காவல்துறை

ஜவுளிக்கடைகளால் நெரிசல் மக்களை மறந்த காவல்துறை

ஈரோடு: ஈரோடு மாநகரில் காந்திஜி சாலை, பழைய பூந்துறை சாலையில் திங்கட்கிழமைகளில் ஜவுளி சந்தை போடுவது வழக்கம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று ஜவுளி வாங்க பொதுமக்கள், மொத்த மற்றும் சில்லரை வணிகர்கள் குவிந்தனர். இதனால் ப.செ.பார்க் முதல் காளை மாட்டு சிலை வரையிலான சாலை, ப.செ.பார்க் முதல் மணிகூண்டு வரை, மற்றும் பழைய கிருஷ்ணா தியேட்டர் வரை கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.போக்குவரத்து நெரிசலை சரி செய்ய டவுன் போலீசார், போக்கு-வரத்து போலீசார் யாரையும் காண முடியவில்லை. ஜவுளி வியா-பாரத்துக்கு இடமளிக்கும் போலீசார், பல்வேறு பிரச்னைக்காக இடம் பெயரும் மக்கள், வாகன ஓட்டிகளை மறந்து விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ