உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காப்பகத்தில் பெண் மர்மச்சாவு சித்தோடு போலீஸ் விசாரணை

காப்பகத்தில் பெண் மர்மச்சாவு சித்தோடு போலீஸ் விசாரணை

பவானி: ஈரோடு பி.பெ.அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சக்தி, 24; சித்தோடு அருகே ஆர்.என்.புதுாரில் தனியார் அறக்கட்டளை நடத்தும் முதியோர் காப்பகத்தில் வேலை செய்கிறார். இங்கு எட்டு பெண்கள் பராமரிப்பில் உள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், கண்ணுார் மாரியம்மன் கோவில் அருகே ஆதரவற்ற நிலையில் இருந்த வள்ளி, 47, கடந்த ஜன., 25ல் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். சில உடல் உபாதைக்காக மாத்திரை சாப்பிட்டு வந்தார். நேற்று முன்தினம் உடல்நல குறைவு ஏற்படவே, ஈரோடு அரசு மருத்துவமனையில் வள்ளியை சேர்த்தனர். மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. உடல் நலக்குறைவால்தான் இறந்தாரா அல்லது வேறு காரணமா என, சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை