உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தொழிலாளி மர்ம சாவு போலீசார் விசாரணை

தொழிலாளி மர்ம சாவு போலீசார் விசாரணை

ஈரோடு, ஈரோட்டில், அறையில் தங்கி இருந்த தொழிலாளி சாவு குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.ஈரோடு, நாடார் மேடு ரத்தினம் மகன் சசிகுமார், 44, கூலி தொழிலாளி. மது குடிக்கும் பழக்கம் உள்ளவர். என்.எம்.எஸ். காம்பவுண்டில், என்.கே.எம். குடியிருப்பில் மூன்றாவது தளத்தில் மூன்றாவது அறையில் தங்கி உள்ளார். கடந்த, 17 காலை, 8:30 மணிக்கு அவரை பார்த்துள்ளனர். அதன் பின் யாரும் பார்க்கவில்லை. நேற்று முன்தினம் அங்கிருந்தவர்கள், அறை கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்கப்படவில்லை. பின்னர், ஈரோடு டவுன் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது மல்லாந்த நிலையில் சசிகுமார் இறந்து கிடந்தார். அவரது உடலை மீட்டு, பெருந்துறை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னரே இறப்புக்கான காரணம் தெரியவரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை