உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சூதாடிய 8 பேர் கைது

சூதாடிய 8 பேர் கைது

பவானி: பவானி அருகே கண்ணாடிபாளையத்தில், சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின்படி, பவானி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சூதாடிய ஐந்து பேரை சுற்றி வளைத்தனர்.விசாரணையில் நல்லிபாளையம் தர்மன், 44; கோபி மொடச்சூர் செல்வம், 44; கோபி வாய்க்கால் வீதி ஹரிகுமரா, 28; கோபி வி.புதுார் விஸ்வநாதன், 52; கோபி குள்ளம்பாளையம் கலைவாணன், 34, என தெரிந்தது. ஐந்து பேரை கைது செய்த பவானி போலீசார், 78 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.இதேபோல் சித்தோடு அருகே அம்பேத்கர் நகர் பகுதியில் சூதாடிய, சித்தோடு சூரியம்பாளையம் ரமேஷ், 38, கருப்புசாமி, 43; ஈரோடு பெரியசேமூர் அப்பன்ராஜ், 48, ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை