மேலும் செய்திகள்
பழைய குற்றவாளிகளை கண்காணிக்கும் போலீசார்
24-May-2026
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்கவும், போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ள வரலாற்று தாள் ரவுடிகள், வரலாற்று தாள்களில் பதிவாகாத ரவுடித்தனம் செய்யும் நபர்களை, கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டை, கடந்த, 20 முதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவட்டத்தில் உள்ள, 612 ரவுடிகளில், 115 பேரின் வசிப்பிடம் சோதனை செய்யப்பட்டது. இதில், 34 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். வரலாற்று தாளில் பதிவாகாத ரவுடிதனத்தில் ஈடுபடும், 29 பேரின் வசிப்பிடங்களில் சோதனை செய்து, ஐந்து ரவுடிகளின் விசாரணை நடந்தது. வரலாற்று தாளில் பதிவாகாத, 23 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
24-May-2026