உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பொங்கல் பரிசு டோக்கன் வழங்கும் பணி துவக்கம்

பொங்கல் பரிசு டோக்கன் வழங்கும் பணி துவக்கம்

ஈரோடு, ஜன. 4-ஈரோடு மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தில், 878முழு நேர ரேஷன் கடைகள், 355 பகுதி நேர ரேஷன் கடைகள் என, 1,233 கடைகள் செயல்படுகின்றன.பொங்கல் பண்டிகைக்காக அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர், இலங்கை தமிழர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு கொண்ட பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.இதன்படி மாவட்டத்தில் உள்ள, 7 லட்சத்து, 44,463 அரிசி கார்டுதாரர்கள், 1,379 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போர் என, 7 லட்சத்து, 45,842 ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது.இதற்காக நேற்று முதல்ரேஷன் கடை பணியாளர்கள், வீடு, வீடாக சென்று பயனாளிகளுக்கு நாள், நேரம் குறிப்பிட்ட டோக்கன் வழங்கி வருகின்றனர்.டோக்கன் பெற்றவர்கள், 9ம் தேதி முதல் 13 வரை பொங்கல் பரிசு தொகுப்பை பெறலாம். மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் டோக்கன் வழங்கும் பணி நேற்று துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை