உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு ஜவுளி சந்தையில் பொங்கல் விற்பனை துவக்கம்

ஈரோடு ஜவுளி சந்தையில் பொங்கல் விற்பனை துவக்கம்

ஈரோடு, ஜன. 1-ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் உள்ள கனி மார்க்கெட் ஜவுளி வணிக வளாகம், அதை சுற்றிய வாரச்சந்தை கடைகள், மணிக்கூண்டு சாலை, டி.வி.எஸ்., வீதி, ஈஸ்வரன் கோவில் வீதிகள், காந்திஜி சாலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் வாரச்சந்தை ஜவுளி விற்பனை நடந்தது. நிரந்தர கடைகள் தவிர, சாலை ஓரங்களிலும், வாகனங்களிலும், குடோன்களிலும் வைத்து ஜவுளி விற்பனை நடந்தது.இதுபற்றி கனி மார்க்கெட் வாரச்சந்தை ஜவுளி கடை வியாபாரிகள் சார்பில் செல்வராஜ் கூறியதாவது: கடந்த, 2 வாரமாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான ஜவுளி விற்பனை ஓரளவு கை கொடுத்தது. தற்போது ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை விற்பனை துவங்கி உள்ளது. ஆண், பெண்கள், குழந்தைகளுக்கான புத்தாடைகள், ஜீன்ஸ் ரகங்கள், நவீன ஆடைகள், நைட்டி, ஜட்டி, பனியன், துண்டு, உள்ளாடைகள், லுங்கி, வேட்டி, புடவை போன்றவைகளும், பனிக்காலமாக உள்ளதால் பெட்ஷீட், பெட்ஸ்பிரட், பல்வேறு வகை விரிப்புகள் விற்பனை நடந்து வருகிறது. மொத்த விற்பனையை விட, சில்லறை விற்பனை அதிகமாக நடக்கிறது. பொங்கல் பண்டிகை வரை இதே அளவு விற்பனைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை