உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பொங்கல் ஜவுளி விற்பனை வாரச்சந்தையில் அதிகரிப்பு

பொங்கல் ஜவுளி விற்பனை வாரச்சந்தையில் அதிகரிப்பு

பொங்கல் ஜவுளி விற்பனை வாரச்சந்தையில் அதிகரிப்புஈரோடு, :ஈரோடு ஜவுளிச்சந்தையில் பொங்கல் பண்டிகை ஜவுளி விற்பனை அதிகமாக நடந்தது.ஈரோட்டில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்றிரவு வரை ஜவுளி சந்தை நடந்தது. இதுபற்றி ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது:பொங்கல் பண்டிகைக்கு இன்னும், ஒரு வாரமே உள்ளதால் வழக்கமான நிரந்தர ஜவுளி கடைகள் தவிர, குடோன்கள், சாலை ஓர கடைகள், வாரச்சந்தை பகுதி கடைகள், பனியன் மார்க்கெட், வாகனங்களில் வைத்து ஜவுளி விற்பனை அதிகமாகவே நடந்தது. தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா மாநில பொதுமக்கள், கடைக்காரர்கள், வியாபாரிகள் அதிகம் வந்திருந்தனர்.தீபாவளிக்கு இணையாக பொங்கல் பண்டிகைக்கு கிராமப்புறங்களில் அதிகம் புத்தாடை அணிவார்கள். அதுபோன்ற சில்லறை விற்பனை கடந்த சில வாரங்களை ஒப்பிடுகையில் நேற்று அதிகமாகவே நடந்தது. மொத்த விற்பனையும், 30 சதவீதம் வரை நடந்தது. தவிர குளிர் காலமாக உள்ளதால் சால்வை, பெட்ஷீட், கம்பளி, ஸ்வெட்டர்களும் அதிகம் விற்றது. இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை