உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.1.57 கோடி மதிப்பில் அருங்காட்சியகம் காலிங்கராயன் அணைக்கட்டில் பூஜை

ரூ.1.57 கோடி மதிப்பில் அருங்காட்சியகம் காலிங்கராயன் அணைக்கட்டில் பூஜை

பவானி, பவானி அருகே காலிங்கராயன்பாளையத்தில், 740 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட காலிங்கராயன் அணைக்கட்டு உள்ளது. இங்கு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்து, ௧.௫௭ கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்தது. இந்நிலையில் கட்டுமான பணி நேற்று தொடங்கியது. வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வு துறை அமைச்சர் முத்துசாமி, பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். அணைக்கட்டில் இருந்து நீர் வெளியேறும் இடம் அருகில் சிறிய அளவில் பூங்கா உள்ளது. இதை சுற்றிப்பார்க்க மக்களுக்கு அனுமதி இல்லை.ஆண்டுக்கு ஒருமுறை அதாவது ஜன., 18ம் தேதி மட்டும் காலிங்கராயன் நினைவு தினத்தில் விவசாயிகள் நன்றி செலுத்தும் விதமாக விவசாயிகள் பூஜை செய்ய மட்டும் அனுமதி உண்டு. அணைக்கட்டு பகுதியில் குளிக்க வேண்டுமென்றால், பவானி பழைய பஸ் ஸ்டாண்ட் சென்று, அங்கிருந்தே செல்ல முடியும்.ஆண்டில் ஒரு நாள் தவிர மற்ற நாட்களில் பூட்டியே கிடக்கும் சூழலில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்ட பின்னராவது, மக்களுக்கு அணைக்கட்டு பகுதிக்குள் சென்று வர அனுமதி அளிக்கப்படுமா? என்று கேள்வி எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !