உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இளைஞர்களை கவரும் பாப்கான் ரக சட்டைகள்

இளைஞர்களை கவரும் பாப்கான் ரக சட்டைகள்

ஈரோடு: தீபாவளி விற்பனையில், பாப்கான் ரக ஆடைகள், இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி, ஈரோட்டில் புத்தாடை விற்பனை சூடுபிடித்துள்ளது. மக்கள் குடும்பம், குடும்பமாக ஆர்வத்துடன் வந்து, ஜவுளி ரகங்களை வாங்கி செல்கின்றனர்.தீபாவளி பண்டிகை ஜவுளி விற் பனையில் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட ரக ஆடைகள் டிரெண்டிங்காவது வழக்கம். அந்த வரி-சையில் இந்த ஆண்டு பாப்கான், டிஸ்யு ரக ஆடைகள் டிரெண்டிங் ஆகி உள்ளது.இந்த துணியில் ஆண்களுக்கான சட்டைகளும், பெண்களுக்கான குர்தி ஆடைகளும் சந்தைக்கு வந்துள்ளன. சட்டைகளில் பிரிண்டட், பிளைன், நேர் டிசைன் ரகங்கள் உள்ளன. இதில் அதிக டிரெண்டு ஆகியிருப்பது கப்புள் டிரஸ் எனப்படும் இணை ஆடைகள் தான். அதாவது ஆணுக்கும், பெணுக்கும் ஒரே துணியில், ஒரே டிசைனில் ஆடைகள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஈரோடு ஜவுளி சந்தைகளில் டிஸ்யு ரக ஆடைகள் அதிக கவனத்தை பெற்றுள்ளது. இதில் குழந்தைகளுக்கு எண்ணற்ற டிசைன்களில் ஆடைகள் உள்ளன. இந்த டிஸ்யு ரகத்தில் சுடிதார், குர்தி, குழந்தைகள் ஆடைகள் விற்-பனையில் முக்கிய இடம் பிடித்துள்ளது.இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: தீபவாளி பண்டிகையை முன்னிட்டு, இந்தாண்டு டிரெண்டிங் விற்பனையில், பாப்கான், டிஸ்யு ரக ஆடைகளை இளைஞர்கள், இளம்பெண்கள் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர். பாப்கான் ரக ஆண்களுக்கான சட்டைகள் ரூ.300 முதல் ரூ.400 வரை, சுடிதார் ரகங்கள் ரூ.600 முதல் ரூ.850 வரையும், குர்தி ரகம் ரூ.150 முதல் ரூ.600 வரையும், டிஸ்யு ரகங்கள் குழந்தைக-ளுக்கு ரூ.250 முதல் ரூ.700 வரையும், பெண் களுக்கு சேலைகள் ரூ.600 முதல் ரூ.800 வரையும், கப்புள் ஆடைகள் ரூ.1,500 முதல் ரூ.4,500 வரை என்ற விலைகளில் விற்பனையாகிறது. இந்த ரக ஆடைகள் அகமதாபாத், புதுடெல்லி, சூரத், பாலி பகு-திகளில் இருந்து விற்பனைக்கு வந்துள்ளன. இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ