உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காற்றின் வேகத்துக்கு சாய்ந்த கம்பம் மூன்று மணி நேரம் மின் நிறுத்தம்

காற்றின் வேகத்துக்கு சாய்ந்த கம்பம் மூன்று மணி நேரம் மின் நிறுத்தம்

அந்தியூர், அந்தியூர் பகுதியில், நேற்று மாலை காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்த நிலையில், மின் கம்பம் சாய்ந்தும், கம்பிகள் அறுந்தும் விழுந்தன.அந்தியூர் மற்றும் தவிட்டுப்பாளையம் பகுதியில் நேற்று மாலை, 6:00 மணிக்கு காற்றுடன் கூடிய லேசான சாரல் மழை பெய்தது. அதிவேக காற்றுக்கு, அந்தியூர் பர்கூர் ரோட்டில் சீதாலட்சுமி தியேட்டர் அருகில் உள்ள, உயர் மின்னழுத்த கம்பம் சாய்ந்தது. இதேபோல், தவிட்டுப்பாளையம் மார்க்கெட் அருகில், மின் கம்பத்திலிருந்து ஒயர் அறுந்து சாலையில் விழுந்தது. அந்தியூர் மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக மின்சாரத்தை துண்டித்தனர். சாலையில் வாகனங்கள் செல்லாதபடி, பிரம்மதேசம் பிரிவில் தடுப்பு அமைக்கப்பட்டு, சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.மேலும், சீதாலட்சுமி தியேட்டர் அருகில் ஒரு குழுவினரும் சாய்ந்த மின்கம்பத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். மூன்று மணி நேரத்திற்கு பிறகு, அனைத்தும் சரி செய்யப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதன் காரணமாக அந்தியூர், மைக்கேல்பாளையம், சங்கராப்பாளையம், புதுப்பாளையம், கூச்சிக்கல்லுார், இந்திரா நகர், புதுக்காடு, வட்டக்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில், மூன்று மணி நேரத்திற்கு மேலாக மின் வினியோகம் நிறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை