சட்ட கல்லுாரி மாணவர்களுக்கு பாராட்டு
ஈரோடு, ஸ்ரீசாய் சிந்து அறக்கட்டளை சார்பாக செயல்பட்டு வரும், ஈரோடு சட்டக் கல்லுாரியில், இறுதியாண்டு எல்.எல்.பி., பல்கலை தேர்வு முடிவு விழா நடந்தது. தலைவர் சிந்து ரவிச்சந்திரன் வாழ்த்து, ஆலோசனை வழங்கி பேசினார். அப்போது, 'ஈரோடு சட்டக் கல்லுாரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு, சென்னையின் முன்னணி பயிற்சி மையத்துடன் இணைந்து ஐ.ஏ.எஸ்., அகாடமி, டி.என்.பி.எஸ்.சி., போட்டி தேர்வுகள், நீதிபதி தேர்வு மற்றும் யு.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது' என்றார்.பல்கலை தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி உமாதேவி, மாணவன் நவீன் குமார், கூடுதல் பாடத்திட்ட செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய மாணவர் ஞானபிரகாஷுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக ஈரோடு சட்டக் கல்லுாரி முதல்வர் கஜேந்திர ராஜா வரவேற்றார். துணை முதல்வர் அக்பர் அலி பேய்க், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சி நிறைவாக இறுதியாண்டு மாணவர் வெற்றிமணி பாரதி நன்றி கூறினார்.