தாராபுரத்தில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழா
தாராபுரம், :திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை ஒட்டி, கிழக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், துாய்மை பணியாளர்கள், 200 பேருக்கு சீருடை வழங்கப்பட்டது.தாராபுரம் கிழக்கு ஒன்றிய தலைவர் புஷ்பலதா தலைமையில், பிரதமர் மோடி பிறந்த நாளை ஒட்டி, கரையூர் காளியம்மன் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. பின், மாவட்ட நிர்வாகிகள் மீனாட்சி கோவிந்தசாமி, கருப்புசாமி முன்னிலையில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாம்பாடி, நாதம்பாளையம் உள்ளிட்ட 7 பஞ்சாயத்துகளில் உள்ள, 200 துாய்மை பணியாளர்களுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது.தூய்மை பணியாளர்கள் மத்தியில், ஸ்வச் பாரத் திட்டம் பற்றியும், பிரதமர் மோடியின் சாதனை குறித்தும், மாவட்ட பொதுச் செயலாளர் சுகுமார் பேசினார். முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் சிவசுப்பிரமணியம், கல்பனா செந்தில் வடிவேல், மைக்ரோ சுரேஷ் மற்றும் ஒன்றிய பொதுச் செயலாளர் விஜயகுமார், மணிவேல், சுப்பிரமணி, வேலுசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.