உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மிரட்டிய ஆசாமிக்கு சிறை

மிரட்டிய ஆசாமிக்கு சிறை

தாராபுரம்: தாராபுரம் அருகே வீட்டு வசதி வாரிய குடியிருப்பை, ஆறுச்சாமி, 67, என்பவர், சில தினங்களாக ஆக்கிரமித்து, வேலி அமைத்து பயன்படுத்தி வந்தார். அதிகாரிகள் எச்சரித்தும் பயனில்லாத நிலையில், ஆக்கிரமிப்பை அகற்றி குடியிருப்பை கைப்பற்ற, வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் சுமதி, உதவி செயற்பொ-றியாளர் கவிதாவாணி உள்ளிட்ட அதிகாரிகள் பொக்லைன் இயந்திரங்களுடன் நேற்று சென்றனர். அப்போது ஆறுச்சாமி தகாத வார்த்தை பேசி மிரட்டினார். தகவல-றிந்து தாராபுரம் போலீசார் மற்றும் தாசில்தார் திரவியம் விரைந்-தனர். அவர்களையும் மிரட்டி ரகளை செய்ததால் பரபரப்பு ஏற்பட்-டது. அதிகாரிகள் அளித்த புகாரின்படி, தாராபுரம் போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ