உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தனியார் வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தனியார் வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈரோடு, தனியார் துறை வங்கிகள் அரசுடமையாக்கப்பட வேண்டும். சங்க தலைவர்களை பழி வாங்கும் பெடரல் வங்கி நிர்வாகத்தை கண்டித்தும், வங்கி கிளைகளில் போதிய பணி நியமிக்க வேண்டும் என்றும் கூறியும், தனியார் துறை வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஈரோடு மாவட்ட வங்கி ஊழியர் சங்கம் சார்பில் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க துணை தலைவர் பாக்கியகுமார், மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் நரசிம்மன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ