மேலும் செய்திகள்
அரசு பள்ளி வளாகத்தில் மாடுகள் கட்டி அட்டகாசம்
14-Jun-2025
காங்கேயம், சிவன்மலையில் தனியார் பள்ளி வளாகத்தில் இருந்த வேப்பமரம் முறிந்து விழுந்ததில், பிளஸ் ௧ மாணவன் பலியானது, சோகத்தை ஏற்படுத்தியது. காங்கேயம், சவுடாம்பிகா நகரை சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் ராஜ்குமார் மகன் அக்சயன், 15; காங்கேயம் அருகே சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக் பள்ளி பிளஸ் ௧ மாணவன். பள்ளியில் நேற்று சிறப்பு வகுப்பு நடந்துள்ளது. இந்நிலையில் மாலை, ௪:௦௦ மணியளவில் இடைவேளையின்போது கழிவறைக்கு, சக மாணவர்களுடன் அக்சயா சென்றுள்ளார். பள்ளி வளாகத்தில் இருந்த ஒரு வேப்பமரத்தின் கிளை திடீரென முறிந்து, நடந்து சென்ற அக்சயன் மீது விழுந்ததில் பலியானார். இதைப்பார்த்த சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காங்கேயம் டி.எஸ்.பி., மாயவன் தலைமையிலான போலீசார் விரைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பலத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
14-Jun-2025