மேலும் செய்திகள்
24ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
13-Jan-2026
ஈரோடு: ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில், ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்-கிறது. எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்த நபர்கள் வரை, செவிலியர்கள், டெய்லர்கள், கணினி இயக்-குவோர், தட்டச்சர்கள், ஓட்டுனர்கள் என அனைத்து தகுதியுள்ள நபர்களை தனியார் துறையினர் பணியமர்த்த செய்கின்றனர்.இதன்படி நாளை மறுதினம் வேலை வாய்ப்பு முகாம் காலை, 10:00 மணி முதல் மதியம், 3:00 மணி வரை நடக்கிறது. கூடுதல் விபரத்தை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அல்லது தொலைபேசி எண், 86754 12356, மின்னஞ்சல் முகவரி gmail.comல் அறியலாம்.
13-Jan-2026