உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கதை தயாரித்த மாணவர்களுக்கு பரிசு

கதை தயாரித்த மாணவர்களுக்கு பரிசு

புன்செய்புளியம்பட்டி: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி பவானிசாகர் வட்டார வள மையம் சார்பில், இல்லம் தேடி கல்வி திட்ட மையங்களில் பயிலும் மாணவர்களுக்கு, நம்ம ஊரு கதை தயாரித்தல் போட்டி நடத்தப்பட்டது. இதில் ஈரோடு மாவட்ட அளவில், 260 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் பவானிசாகர் வட்டார வள மையத்துக்கு உட்பட்ட ஒன்பது இல்லம் தேடி கல்வி மையங்களை சேர்ந்த, 161 மாணவர்கள் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவர்களின் வெற்றிக்கு காரணமான இல்லம் தேடி கல்வி வட்டார தன்னார்வலர் சுதர்சினி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் மூர்த்தி, ஆசிரியர் பயிற்றுனர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை