| ADDED : டிச 05, 2025 10:08 AM
ஈரோடு: தமிழ் வளர்ச்சி துறை சார்பில், காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி ஈரோட்டில் நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டியில், நடுவர்-களாக ஆசிரியர்கள் ஹரிராம், சம்பத், கந்தசாமி செயல்பட்டனர்.இதில் அந்தியூர் அரசு மகளிர் மேல்நிலைப்-பள்ளி நிவேதாஸ்ரீ, ஓடத்துறை சோ.நி.அரசு மேல்-நிலைப்பள்ளி கவிபிரியா, வலையபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மெளலிஷா ஆகியோர் முறையே முதல் மூன்று பரிசு பெற்றனர். மொடச்சூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அஜிதாஸ்ரீ, அ.செம்புளிச்சாம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழரசி சிறப்பு பரிசாக, தலா, 2,000 ரூபாய் வென்றனர்.கல்லுாரி மாணவர் போட்டிக்கு, பேராசிரி-யர்கள் விஸ்வநாதன், மாணிக்கபூபதி, மோகன்ராஜ் நடுவர்களாக செயல்பட்டனர். ஈரோடு பாரதியார் பல்கலை விரிவாக்க மையம் அமல் உன்னிகிருஷ்ணன், ஈரோடு கலை அறி-வியல் கல்லுாரி ஜோஷ்வா டேனியல், கோபி கலை அறிவியல் கல்லுாரி பார்க்கவி ஆகியோர் முதல் மூன்று பரிசு பெற்றனர். முன்னாள் பிரதமர் நேரு பிறந்த நாளுக்கான பேச்சுப்போட்டி இன்று நடக்கிறது.