மேலும் செய்திகள்
வரும் 30, 1ல் பேச்சு போட்டி விண்ணப்பிக்க அழைப்பு
26-Jun-2025
ஈரோடு, தமிழ் வளர்ச்சி துறை சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி ஈரோட்டில் நடந்தது. இதில், 30க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரிகள் பங்கேற்றன.பள்ளி மாணவர் பேச்சு போட்டியில், கவுந்தப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி - வெ.பிரணிதா, பட்டிமணியக்காரன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி - பா.தர்ஷினி, வளையபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி - விந.நா.தமிழ்க்கனி முதல் மூன்று இடங்களை வென்று, 5,000, 3,000, 2,000 ரூபாய் ரொக்கப்பரிசு வென்றனர். அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களில் மொடச்சூர் நகரவை மேல்நிலைப்பள்ளி - சூ.நிதிஷா, பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி - சு.நிரஞ்சன் நடராஜ் சிறப்பு பரிசாக தலா, 2,000 ரூபாய் பரிசு வென்றனர்.கல்லுாரி மாணவர் பிரிவில், அரச்சலுார் நவரசம் கலை அறிவியல் கல்லுாரி - க.நந்தினிதேவி, ஈரோடு வேளாளர் மகளிர் கல்லுாரி - த.ராஜேஸ்வரி, ரங்கம்பாளையம் ஈரோடு அறிவியல் கல்லுாரி - ப.ஜோஷ்வா டேனியல் முதல் மூன்று இடங்களை வென்று, 5,000, 3,000, 2,000 ரூபாய் பரிசுத்தொகை வென்றனர்.
26-Jun-2025