உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ. 2.84 லட்சத்துக்கு விளைபொருள் ஏலம்

ரூ. 2.84 லட்சத்துக்கு விளைபொருள் ஏலம்

ரூ. 2.84 லட்சத்துக்கு விளைபொருள் ஏலம்அந்தியூர், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், நேற்று நடந்த ஏலத்துக்கு, 4,௦௦௦ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு கிலோ, 36.69 ரூபாய் முதல் 51.60 ரூபாய் வரை விற்றது. தேங்காய் பருப்பு, 22 மூட்டை வரத்தாகி, கிலோ, 114.91 - 144.09 ரூபாய் வரை விற்றது. எள் ஏழு மூட்டை, மக்காச்சோளம் இரண்டு மூட்டை, ஆமணக்கு ஏழு மூட்டை, தட்டைப்பயிறு, 14 மூட்டை, உளுந்து, 10 மூட்டை வரத்தானது. அனைத்தும், 2.84 லட்சம் ரூபாய்க்கு விற்றதாக, விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ