உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.27.54 லட்சம் மதிப்பில் திட்டப்பணி தொடக்கம்

ரூ.27.54 லட்சம் மதிப்பில் திட்டப்பணி தொடக்கம்

ரூ.27.54 லட்சம் மதிப்பில் திட்டப்பணி தொடக்கம்காங்கேயம், டிச. 22-காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் சிவன்மலை ஊராட்சி சிவன்மலையில், 15வது நிதிக்குழு மானியம் மற்றும் ஊராட்சி பொதுநிதி, கனிமம் மற்றும் சுரங்கம் நிதியில், 22.64 லட்சம் ரூபாய் மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, 4.90 லட்சம் ரூபாய் மதிப்பில் ஊராட்சி நிதியிலிருந்து வழங்கப்பட்ட இழுவை இயந்திரத்தை மக்கள் பயன்பாட்டுக்கும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார்.இதையடுத்து குண்டடம் யூனியன் காங்கேயம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த, கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில், இலவச சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலர் சந்தோஷ்குமார், காங்கேயம் ஒன்றிய தி.மு.க., செயலாளர் சிவானந்தன், குண்டடம் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், சிவன்மலை ஊராட்சி தலைவர் துரைசாமி, வார்டு கவுன்சிலர் சிவக்குமார், உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை