உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.4.36 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் தொடக்கம்

ரூ.4.36 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் தொடக்கம்

சென்னிமலை, காங்கேயம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சென்னிமலை யூனியன் குப்புச்சிபாளையம், முருங்கத்தொழுவு, எக்கட்டாம்பாளையம், முகாசிபிடாரியூர், புதுப்பாளையம், புஞ்சை பாலதொழுவு ஊராட்சிகளில் சாலை அமைத்தல், தொகுப்பு வீடு கட்டுதல், ஊராட்சி கட்டடம் திறப்பு என, 30 திட்டபணிகள், 4.36 கோடி ரூபாய் மதிப்பில் நடந்தது. இந்த பணிகளின் திறப்பு விழா நேற்று நடந்தது.ஈரோடு கூடுதல் கலெக்டர் அர்பித்ஜெயின் தலைமை வகித்தார். செய்திதுறை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார். விழாவில் ஈரோடு எம்.பி., பிரகாஷ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், முன்னாள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை