உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சொத்து வரி... ஓயாத புயல்

சொத்து வரி... ஓயாத புயல்

சொத்து வரி... ஓயாத 'புயல்'திருப்பூர், டிச. 2-சொத்து வரி உயர்வு விவகாரம், திருப்பூர் மாநகராட்சியை, 'புயல்' ஆக மையம் கொண்டுள்ளது. கடந்த மாதம் 28ம் தேதி மாமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மேயரை முற்றுகையிட்டதோடு, மறியலிலும் ஈடுபட்டனர். தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூ., - காங்., கவுன்சிலர்களும் மறியலில் குதித்தனர்.மறியல் போராட்டத்தின் போது, போலீசாரின் நடவடிக்கைகள் தி.மு.க., கூட்டணி கட்சியினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அன்று மாலையே அவசர ஆலோசனை கூட்டம் நடத்திய தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சி நிர்வாகிகள், சொத்துவரி உயர்வை திரும்ப பெற வேண்டியும், மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையைக் கண்டித்தும், அத்துமீறிய போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை கோரியும் தீர்மானம் நிறைவேற்றினர். அ.தி.மு.க., சார்பில் நாளை உண்ணாவிரதமும், தே.மு.தி.க., சார்பில் 4ம் தேதி ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட உள்ளன. தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள், நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளன. திருப்பூர் வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பிலும் நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. கரையை கடக்குமா சொத்து வரி விவகாரப் 'புயல்?'


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி