உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மருத்துவ கல்லுாரியில் சான்றிதழ் படிப்பு 12க்குள் விண்ணப்பிக்க யோசனை

மருத்துவ கல்லுாரியில் சான்றிதழ் படிப்பு 12க்குள் விண்ணப்பிக்க யோசனை

ஈரோடு :ஈரோடு அரசு மருத்துவ கல்லுாரியில் சுகாதாரத்துறைக்கான சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.ஈரோடு அரசு மருத்துவ கல்லுாரியில், ஓராண்டு படிப்பான ஈ.சி.ஜி., - டிரெட் மில் டெக்னீஷியன் - 19 இடங்கள், அவசர சிகிச்சை பிரிவு டெக்னீஷியன் - 20, சுவாச சிகிச்சை டெக்னீஷியன் - 10, டயாலிசிஸ் டெக்னீஷியன் - 19, மயக்கவியல் துறை டெக்னீஷியன் - 19, அறுவை அருங்கு டெக்னீஷியன் - 19, எலும்பு முறிவு துறை டெக்னீஷியன் (ஆண்கள்) - 20, பல் நோக்கு மருத்துவமனை பணியாளர் - 20 இடங்கள் என, 146 இடங்கள் காலியாக உள்ளன. இப்படிப்பில் சேர வரும் டிச., 31ல், 17 வயது அடைந்வோர் விண்ணப்பிக்கலாம். கல்வி, வயது விபரங்களை நேரில் அறியலாம். விண்ணப்ப படிவம், www.gemch.ac.inஎன்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ஈரோடு மருத்துவ கல்லுாரி முதல்வர் அல்லது துணை முதல்வர் அலுவலகத்தில் வரும், 12க்குள் சமர்ப்பிக்க வேண்டும். தேர்ச்சி பட்டியல், 16ல் வெளியிடப்படும். மாணவர் சேர்க்கை, 20ம் தேதி முதல் துவங்கும். மீதி இடங்களுக்கு, 22 முதல் நேரடி சேர்க்கை நடக்கும். முழு சேர்க்கை செயல்முறை, 30க்குள் நிறைவு பெற்று, அக்.,6ல் வகுப்புகள் துவங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !