மேலும் செய்திகள்
தேங்காய் உடைத்து வழிபாடு: ஹிந்து முன்னணி அழைப்பு
24-Sep-2024
திருப்பதி லட்டு விவகாரத்தை கண்டித்துசூரத்தேங்காய் உடைத்து போராட்டம்கோபி, செப். 29-திருப்பதி லட்டுவில், விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்ட விவகாரத்தில், தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்க கோரி, இந்து முன்னணி சார்பில், கோபி, அனுமந்தராயன் கோவில் வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில், சூரத்தேங்காய் உடைக்கும் போராட்டம் நேற்று நடந்தது.ஈரோடு மாவட்ட செய்தி தொடர்பாளர் பிரபாகரன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன், நகர தலைவர் விமல்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈரோடு மாவட்டம், கோபி, அனுமந்தராயன் கோவில் வீதி முன் குவிந்த இந்து முன்னணியினர், சூரத்தேங்காய்களை உடைத்து, திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு சேர்த்தவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும் என கூறினர். இதையடுத்து அவர்கள் வழிபாடு செய்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். நகர செயலாளர் சந்திரன், நகர துணைத்தலைவர் பால்ராஜ், நகர பொறுப்பாளர்கள் சபரி, வசந்த், தயானந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.* இதேபோல், ஈரோடு மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில், வ.உ.சி. பூங்கா மகாவீர ஆஞ்ச நேயர் கோவில் முன், திருப்பதி லட்டு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தண்டனை வழங்க கோரி, தேங்காய் உடைக்கும் போராட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் ஜெகதீசன், மாவட்ட செயலாளர் முரளி உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
24-Sep-2024