அமெரிக்க வரி விதிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஈரோடு :அமெரிக்காவின், 50 சதவீத கூடுதல் வரி விதிப்பை கண்டித்து, கம்யூ., கட்சிகள் சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.பி.ஐ., எம்.எல்., மாவட்ட அமைப்பாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். இந்திய கம்யூ., வடக்கு மாவட்ட துணை செயலர் பாலமுருகன், மார்க் கம்யூ., மாவட்ட செயலர் ரகுராமன், முத்துகிருஷ்ணன், கல்யாணசுந்தரம் உட்பட பலர் பேசினர்.