உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தொழிலாளர் கொள்கையை வெளியிட கோரி ஆர்ப்பாட்டம்

தொழிலாளர் கொள்கையை வெளியிட கோரி ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஈரோடு சூரம்பட்டி, 4 ரோட்டில், ஏ.ஐ.டி.யு.சி., ஈரோடு மாவட்டக்குழு சார்பில் மாவட்ட துணை தலைவர் செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழக அரசு தொழில் கொள்கை, கல்வி கொள்கையை வெளியிட்டிருப்பதுபோல, தொழில் வளம், பொருளாதார வளர்ச்சி, உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் தொழிலாளர் தொடர்பான தொழிலாளர் கொள்கையை வெளியிட வேண்டும். தொழிலாளர்களின் கண்ணியமான வாழ்க்கை, பணி நிரந்தரம், அறிவியல் அடிப்படையில் குறைந்த பட்ச ஊதிய நிர்ணயம், ஓய்வூதியம் உள்ளிட்ட சட்டப்பூர்வ உரிமைகள், பி.எப்., - ஈ.எஸ்.ஐ., உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களை தொகுத்து தொழிலாளர் கொள்கையாக வெளியிட வேண்டும் என, வலியுறுத்தினர்.மாநில செயலர் சின்னசாமி, மாவட்ட செயலாளர்கள் (வடக்கு) மோகன்குமார், (தெற்கு) பிரபாகரன், நிர்வாகிகள் சித்தையன், குணசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ