பட்டா கேட்டு போராட்டம்
காங்கேயம், காங்கேயம் தாலுகா எல்லப்பாளையம் புதுார் ஊராட்சியை சார்ந்த புள்ளக்காளிபாளையம் கிராமத்தை சார்ந்த, 20 குடும்பத்தை சேர்ந்த அருந்ததியர் பட்டியல் சமூகத்தினர், ஏழு ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா கோரி விண்ணப்பம் அளித்து வருகின்றனர். ஆனாலும் இதுவரை பட்டா வழங்கவில்லை. இந்நிலையில் பட்டா வழங்ககோரி, காங்கேயம் தாசில்தார் அலுவலகத்தில் ஆதி தமிழர் ஜனநாயக பேரவை தலைவர் பவுத்தன் தலைமையில், 20 குடும்பத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.