உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / துாய்மை பணியாளர் சார்பில் ஆர்ப்பாட்டம்

துாய்மை பணியாளர் சார்பில் ஆர்ப்பாட்டம்

ஈரோடு:ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி ஊழியர் சங்கம் - சி.ஐ.டி.யு., சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஈரோடு மாநகராட்சியில், ஐந்து முதல், 20 ஆண்டுகளாக பொது சுகாதார பிரிவில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கி, ஊதிய உயர்வு வழங்க வேண்டும். நிரந்தர பணியில் தனியார் மய அரசாணையை திரும்ப பெற வேண்டும். பணியின்போது இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு, பணி நியமனம் வழங்க என வலியுறுத்தினர். சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் சுப்பிரமணியன்யில் கோரிக்கை மனுவை கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தேன்மொழியிடம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை