உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரயில் பயணிகள் பாதுகாப்பு உறுதி செய்ய ஆர்ப்பாட்டம்

ரயில் பயணிகள் பாதுகாப்பு உறுதி செய்ய ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் முன், நேற்று அகில இந்திய லோகோ ஓடும் தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 28,769 ரயில் உதவி டிரைவர்கள் ஆட்சேர்ப்பை உறுதி செய்ய வேண்டும். ரயில் பாதுகாப்பு, பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ரயில்வே பாதுகாப்பை குறைத்து மதிப்பிடக் கூடாது. ஆறு ஆண்டாக காலி பணியிடங்கள் குறித்து பட்டியல் அனுப்பாதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மண்டல ஒருங்கிணைப்பு செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். இதில் மூன்று பெண்கள் உள்ளிட்ட, 40 பேர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை