மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்
20-Jan-2026
நம்பியூர்: நம்பியூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடந்தது. முதல்வர் சூரியகாந்தி தலைமை வகித்தார். நம்பியூர் பேரூராட்சி மன்ற தலைவரும், தி.மு.க., ஒன்றிய பொறுப்பாளருமான மெடிக்கல் செந்தில்குமார், நம்பியூர் பேரூர் பொறுப்பாளர் ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், 148 மாணவ,- மாணவியருக்கு மடிக்கணினி வழங்கி பேசினார். முன்னதாக கணி-தவியல் துறை தலைவர் தமிழ்மணி வரவேற்றார். வணிக நிர்வாக-வியல் துறை தலைவர் யூனஸ் நன்றி கூறினார்.
20-Jan-2026