உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விகிதாச்சார அடிப்படையில் நீர் வழங்குவது நடைமுறையில் சாத்தியமற்றது; சுபிதளபதி

விகிதாச்சார அடிப்படையில் நீர் வழங்குவது நடைமுறையில் சாத்தியமற்றது; சுபிதளபதி

கோபி:கொடிவேரி அணை-பவானி நதி பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சுபிதளபதி தலைமையில், பாசன நீர் மேலாண்மை குறித்து அவசர கூட்டம், கோபியில் நேற்று மாலை நடந்தது. இதில் பங்கேற்ற சுபி தளபதி கூறியதாவது:பவானிசாகர் அணை, 32 டி.எம்.சி., மட்டுமே கொள்ளளவை கொண்டது. ஆனால் அணையில் இருந்து வருடாந்திர தேவையாக, குடிநீர், விவசாயம் மற்றும் தொழிற்சாலைக்கு, 70 டி.எம்.சி., வேண்டும். எனவே பவானிசாகர் அணை ஒவ்வொரு முறையும், இருமுறை நிரம்புவது என்பது சாத்தியமற்றது. பவானிசாகர் அணை நீர் இருப்பை குறைக்கும் வகையில், ஏப்ரலில் கொடிவேரி பாசனங்களுக்கும், ஜூனில் காளிங்கராயனுக்கும் நீர் திறந்தால், ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்களில், தென்மேற்கு பருவமழை துவங்கியதும், அணைக்கு அதிகப்படியான நீர் வரத்தாகும். அவ்வாறு வரத்தாகும் நீரை சேமித்து வைத்து, கீழ்பவானி பாசனத்துக்கு நீரை கொடுக்க முடியும். எனவே கீழ்பவானி பாசனங்களுக்கு விகிதாச்சார முறை அடிப்படையில் நீர் வழங்குவது நடைமுறையில் சாத்தியமற்றது. கீழ்பவானி பாசனத்துக்கு முறையாக நீர் திறக்க இன்னும் ஒரு மாதம் உள்ளது. ஆண்டுதோறும் ஆக.,15ல் தான் நீர் திறக்க வேண்டிய தேதி. அதை விடுத்து ஜூலை, 15ல் நீர் திறக்க வேண்டும் என்பது ஏற்புடையதல்ல. வேண்டுமென்றே விஷம பிரசாரத்தில் ஈடுபடும் கும்பலின் சதிச்செயல் என நாங்கள் கருதுகிறோம். எனவே மாவட்ட நிர்வாகம், சமூக அமைதி கருதி, விவசாயிகளின் நலன் கருதி, அந்த தனி நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி