உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறுத்தையை பிடிக்க கூண்டு வைப்பு

சிறுத்தையை பிடிக்க கூண்டு வைப்பு

சென்னிமலை: சென்னிமலை தெற்கு வனப்பகுதியை ஒட்டிய தோட்ட பகுதி-களில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. அவ்வப்போது தோட்-டத்தில் புகுந்து ஆடுகளை கடித்து கொன்றும், தின்றும், இழுத்தும் செல்வது வழக்கமாக உள்ளது. சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக சில்லாங்காட்டு அருகில் வனப்பகுதியை ஒட்டியுள்ள ஒரு தோட்டத்தில், நேற்று முன்தினம் கூண்டு வைத்தனர். கூண்டுக்குள் உயிருடன் ஆட்டை கட்டி வைத்துள்ளனர். அதே சமயம் ஆட்டுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கூண்டு அமைக்-கப்பட்டுள்ளது. சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க ஐந்து இடங்களில் கேமராவும் வைக்கப்பட்டுள்ளது. சிறுத்தை நடமாட்டம் குறித்து ஈரோடு வனச்சரகர் சுரேஷ், அவ்-வப்போது ஆய்வு செய்து வருகிறார். தற்பொழுது இதே பகு-தியில் மேலும் ஒரு கூண்டு வைப்பதற்கு வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். சென்னிமலை வனப்பகுதியில் இரண்டு சிறுத்தை இருப்பதாகவும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை