உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில், 2.84 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்துள்ளனர். கால்நடைகளை கோமாரி நோய் தாக்காமல் இருக்க, கால்நடை பராமரிப்பு துறை மூலம் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நடப்பாண்டு இன்று முதல் வரும், 10ம் தேதி வரை மாவட்டத்தின் அனைத்து குக்கிராமங்கள், வருவாய் கிராமங்கள், டவுன் பஞ்.,கள், நகராட்சிகள், மாநகராட்சி பகுதிகளிலும், 9 வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதற்காக, 114 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில், 2 லட்சத்து, 84,300 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை