மாவட்டத்தில் ஜூலை 2 முதல் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் கால்நடைகளை கோமாரி நோய் தாக்கத்தில் இருந்து தடுக்க, கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி, கால்நடை பராமரிப்பு துறை மூலம் நடக்க உள்ளது. கிராமப்புற வளர்ச்சியில், விவசாயிகளின் கூடுதல் வருவாயாக கால்நடை வளர்ப்பு உள்ளது. இவற்றை கோமாரி நோய் தாக்குதல் கடுமையாக பாதிக்கும். பசு, எருமைகளை கால், வாய் சப்பை நோய் அதிகம் தாக்கி, பொருளாதார இழப்பு, இறப்பு, சினை பிடிப்பு தடைபடுதலை ஏற்படுத்தும். எருதுகளின் வேலை திறன் குறையும். இளங்கன்றுகளின் இறப்பு உயரும். இதற்காக ஜூலை, 2 முதல், 31 வரை மாவட்டத்தின் அனைத்து கிராமங்கள், டவுன் பஞ்.,கள் நகராட்சி, மாநகராட்சி பகுதிகளிலும், 7 வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம், 114 குழுக்கள் அமைத்து, 3 லட்சத்து, 5,200 கால்நடைகளுக்கு செலுத்தப்படுகிறது.