மேலும் செய்திகள்
ராஜிவ் நினைவு தினம்; காங்கிரசார் அஞ்சலி
22-May-2025
நம்பியூர், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பிறந்த நாள் விழா, நம்பியூர் வட்டார காங்., சார்பில், நேற்று கொண்டாடப்பட்டது. வட்டார தலைவர் ஜவகர் தலைமை வகித்தார். தெற்கு வட்டார தலைவர் சண்முக சுந்தரம், நம்பியூர் நகர தலைவர் சதீஷ்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், நம்பியூர் பேரூராட்சி துணைத்தலைவர் தீபா முன்னிலை வகித்தனர். நம்பியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு, குழந்தைகளுக்கு துணி மற்றும் பால், ரொட்டி வழங்கப்பட்டது. நம்பியூர் வட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், கட்சி கொடிேற்றி மக்களுக்கு இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மருது (எ) மருதாசலம், வட்டார துணை தலைவர் கோபிநாத், துரைசாமி, தங்கவேல், நசூர்யுல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
22-May-2025