மேலும் செய்திகள்
பவானி, அந்தியூரில் கொட்டிய மழை
04-Oct-2024
பவானி: ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளான குருவரெட்டியூர், சனிசந்தை, சென்னம்பட்டி, கிட்டம்பட்டி உள்ளிட்ட இடங்களில், நேற்றிரவு, 7:௦௦ மணி முதல், 8:௦௦ மணி வரை, ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இதேபோல் அம்மாபேட்டை, சிங்கம்பேட்டை, பூதப்பாடி, பூனாச்சி, நெருஞ்சிப்பேட்டையிலும் கனமழை கொட்டி தீர்த்தது. வெள்ளித்திருப்பூர், ரெட்டியபாளையம், எண்ணமங்கலம், வட்டக்காடு, வரட்டுப்பள்ளம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது.* திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி பகுதியில், நேற்று மாலை, 6:௦௦ மணிக்கு சாரல் மழை பெய்ய தொடங்கியது. அரை மணி நேரம் சாரலாகவஏ பெய்து ஓய்ந்தது. உப்புத்துறைபாளையம், கொண்டரசம்பாளையம் பகுதிகளிலும், லேசான மழை பெய்தது.
04-Oct-2024