பவானி, அந்தியூரில் மழை
பவானி, பவானியில் நேற்று மாலை, 4:00 மணியளவில், திடீரென மழை பெய்ய தொடங்கியது. ௪:௩௦ மணி வரை தொடர்ந்து அதே வேகத்தில் கொட்டி தீர்த்தது.இதேபோல் தளவாய்பேட்டை, ஒரிச்சேரி, ஒரிச்சேரிப்புதுார், விஜயகாலனி, ஆப்பக்கூடல், பெருந்தலையூர், கூத்தம்பூண்டி, சென்னிமலைக்கவுண்டன்புதுார், கூலிவலசு, கீழ்வாணி, மூங்கில்பட்டி, கருல்வாடிப்புதுார், கைகாட்டி, அத்தாணி பகுதிகளிலும், அரை மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது.* அந்தியூர், தவிட்டுப்பாளையம், அண்ணாமடுவு, காட்டூர், புது மேட்டூர் பகுதியில் நேற்று மாலை, 4:20 மணிக்கு தொடங்கிய மழை, 20 நிமிடம் மிதமாக பெய்து ஓய்ந்தது.அதேசமயமம் வெள்ளித்திருப்பூர், ஆலாம்பாளையம், எண்ணமங்கலம், வட்டக்காடு பகுதியில் கனமழை பெய்தது. சென்னம்பட்டி, சனிச்சந்தை, ஜரத்தல், முரளி, கிட்டம்பட்டி, பாப்பாத்திக்காட்டூர் பகுதிகளில் அரைமணி நேரத்துக்கும் மேலாக மிதமான மழை பெய்தது.