உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு, தாராபுரத்தில் மழை

ஈரோடு, தாராபுரத்தில் மழை

ஈரோடு:ஈரோடு மாநகரில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மாலை 4:45 மணியளவில் சாரல் மழை துவங்கியது. இந்த மழை, 30 நிமிடங்கள் நீடித்தது. மழைக்கு நடுவில் பலத்த காற்றுடன் பயங்கர சத்தத்துடன் இடி, மின்னல் அடித்தது. இதையடுத்து இரவு 8:00 மணி வரை விட்டு விட்டு லேசான சாரல் மழை பெய்தது.* தாராபுரத்தில் மாலை 6:00 மணியளவில் சாரல் மழை பெய்தது. குண்டடம் பகுதியில் அரை மணி நேரம் லேசான மழை பெய்தது.* பெருந்துறை மற்றும் சுற்று பகுதிகளில் மாலை 5:00 முதல் 6:00 மணி வரை மழை பெய்தது. மழை காரணமாக தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை