மேலும் செய்திகள்
பெருந்துறையில் 48 மி.மீ., மழை
06-Nov-2026
ஈரோடு; ஈரோடு மாநகரில் கடந்த சில நாட்களாகவே இரவில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. ஆனாலும் பகலில் வழக்கம்போல் வெயிலின் தாக்கம் உள்ளது.தீப திருநாளான நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு லேசான சாரல் மழை, 10ம் நிமிடம் தீர்த்தம் போல் பெய்து ஓய்ந்தது.மதியம், 2:30 மணிக்கு மீண்டும் சாரல் மழை ஆரம்பித்து, 15 நிமிடங்களில் நின்றது. பின், 3:45 மணிக்கு ஆரம்பித்த சாரல் மழை, பத்து நிமிடத்துக்கு ஒருமுறை இடைவெளி விட்டு விட்டு, 5:00 மணி வரை பெய்தது. கார்த்திகை தீபத்தன்று மழை பெய்யும் என்பது ஐதீகம். நடப்பாண்டும் வருணபகவான் கருணையால் மழை பொழிந்ததால், பக்தர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.* கோபி மற்றும் சுற்று வட்டார பகுதியில், நேற்று காலை முதல், வானம் மேக மூட்டமாக காட்சியளித்தது. இந்நிலையில் கோபி, கரட்டூர், குள்ளம்பாளையம், வெள்ளாளபாளையம், நாதிபாளையம், கங்கம்பாளையம், புதுப்பாளையம், நாயக்கன்காடு உள்ளிட்ட பகுதியில் மாலை, 6:00 மணிக்கு திடீரென சாரல் மழை பெய்தது. பத்து நிமிடத்தில் முடிந்தது. * ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக கோபியில், 2.20 மி.மீ மழை பெய்தது. இதேபோல் எலந்தகுட்டை மேட்டில், 1.20, சென்னிமலை, குண்டேரிபள்ளம், சத்தியில் தலா, 1 மி.மீ., மழை பெய்தது.
06-Nov-2026