ராமகோபாலன் பிறந்த தினம்
'தாராபுரம், இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் பிறந்த தினத்தை ஒட்டி, தாராபுரம் நகரில் உப்புத்துறைபாளையம், தென்தாரை, மாரியம்மன் கோவில், ராமர் கோவில் வீதி உள்பட பல இடங்களில் அவரது படத்துக்கு, இந்து முன்னணி நிர்வாகிகள் மரியாதை செய்தனர். ஆலாம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளிலும் ராமகோபாலனின் பிறந்தநாளை கொண்டாடினர்.