உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வீடு தேடி வரும் ரேஷன் பொருள்:81,792 பயனாளிகளுக்கு வழங்கல்

வீடு தேடி வரும் ரேஷன் பொருள்:81,792 பயனாளிகளுக்கு வழங்கல்

ஈரோடு:தமிழகத்தில் முதியோர், மாற்றுத்திறனாளி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, அவர்களது வீட்டுக்கே வந்து அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வினியோகம் செய்யும் தாயுமானவர் திட்டம் கடந்த ஆக., 12ல் துவங்கப்பட்டது.ஈரோடு மாவட்டத்தில் செயல்படும், 924 முழு நேர, 339 பகுதி நேர ரேஷன் கடை என, 1,263 கடைகளில், 70 வயதுக்கு மேற்பட்ட, 79,057 பேரும், 2,735 மாற்றுத்திறனாளி பயனாளிகள் என, 81,792 பயனாளிகள் கண்டறியப்பட்டனர். இவர்களது வீட்டுக்கே குடிமை பொருள் வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டது. ஒவ்வொரு மாதமும், 2வது சனி, ஞாயிறு அன்று இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் மின்னணு எடைத் தராசு, பாயின்ட் ஆப் சேல்ஸ் விற்பனை முனை இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்கள், குடிமை பொருட்களையும் வாகனங்களில் கொண்டு சென்று, பயனாளிகளின் வீட்டிலேயே ரேஷன் கடை விற்பனையாளர்கள் வழங்கி வருகின்றனர். கூடுதல் பயனாளிகள் உள்ளார்களா என்பது குறித்தும் தொடர்ந்து கணக்கெடுப்பு செய்யப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ