மேலும் செய்திகள்
அரசு அலுவலகம் கட்ட நிதி ஒதுக்கீடு
23-Nov-2024
எஸ்.பி., ஆபீசில் கூடுதல் கட்டடம் கட்ட அரசுக்கு பரிந்துரைஈரோடு, டிச. 2-ஈரோடு எஸ்.பி. அலுவலக கட்டடம், 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. கால மாற்றத்துக்கு ஏற்ப போதிய அறைகள், வசதிகள் இல்லை. இந்நிலையில் இணைப்பு (கூடுதல்) கட்டடம் கட்ட, தமிழக அரசுக்கு திட்ட மதிப்பீடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: எஸ்.பி., அலுவலகத்தில் ஒருங்கிணைந்த போலீஸ் அலுவலகமாக இணைப்பு கட்டடம் கட்ட. தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் மூலம் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. 15 கோடி ரூபாய் மதிப்பில் இணைப்பு கட்டடம் கட்ட, அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அரசு உத்தரவிடும் பட்சத்தில், இணைப்பு கட்டடம் கட்ட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் கட்டடம் கட்டும் பட்சத்தில் போலீசாரின் பல்வேறு பிரிவுகள் ஓரிடத்தில் வரும். நிர்வாக கண்காணிப்பும் எளிதாகும். இவ்வாறு கூறினர்.
23-Nov-2024