மூதாட்டி உடலுடன் உறவினர்கள் போராட்டம்
அந்தியூர்: அந்தியூர் அருகேயுள்ள ஒலகடம் தாண்டாம்பாளையம், நல்லதம்பிபாளையம் காட்டுக்கொட்டாயை சேர்ந்த மூதாட்டி காவேரி, 82; கூலி தொழிலாளி. உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் மாலை இறந்தார். இப்பகுதியில் இறந்தவர்களை மயானத்தில் அடக்கம் செய்ய, பட்டா நில வண்டிப்பாதையை பயன்படுத்தி வந்தனர். ஒராண்டுக்கு முன் வண்டிப்பாதை உரிமையாளருக்கும், இவர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டதால், வண்டிப்பாதை வழியை கம்பி வேலி அமைத்து தடுத்தார்.இந்நிலையில் மாற்று வழிப்பாதை இருந்தும், பட்டா நில வண்டிப்பாதையில் தான் உடலை கொண்டு செல்லுவோம் எனக்கூறி மூதாட்டி உடலை வீட்டிலேயே வைத்து, உறவினர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தியூர் தாசில்தார் இளஞ்செழியன், டி.எஸ்.பி.,க்கள் ரத்னக்குமார், சுகுமாரன் பேச்சுவார்த்தை நடத்தியும் சமாதானம் ஆகவில்லை.